மின்னணு பணமாற்றம் - எலெக்ட்ரானிக் ஃபண்ட்ஸ் டிரான்ஸ்ஃபர்

மின்னணு பணமாற்றம் - எலெக்ட்ரானிக் ஃபண்ட்ஸ் டிரான்ஸ்ஃபர்


காசோலைகள் போன்ற எந்த விதமான காதித ஆவணங்கள் இல்லாமல் வங்கிகளின் கணினிகள் மூலமாகவே பணமாற்றம் நடைபெறுவது எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர் எனப்படுகிறது.  இவை பணமாற்றத்தை விரைவாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகின்றன. எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர்களில் காசோலையோ வேறு விதமான காதிதமோ கிடையாது.

இதனால் தொகையை மாற்றியோ பெயரை மாற்றியோ பணம் கையாடல் செய்யக்கூடிய வாய்ப்புகள் குறைவு. மின்னணு முறையில் பணம் கொடுக்க வாங்க வேண்டிய செய்தி பரிமாறப் படுவதால் கடிதக் காசோலை போன்று  ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் போய் சேர ஆகும் நேரம் மிச்சமாகிறது. காசோலை உபயோகிக்கும் போது பணம் பெறுபவர் காசோலையைத் தன்னுடைய வங்கியில் வைப்பு செய்து பணப் பா¢மாற்றத்தைத் துவக்க வேண்டும்.

ஆனால்எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர்களில் பணம் அனுப்புபவர் தன்னுடைய வங்கிக்குப் பணமாற்றத்துக்கான ஆணையைக் கொடுத்தால் அவ்வங்கி அவருடைய கணக்கிலிருந்து பணம் எடுத்து பணம் பெறுபவருடைய வங்கியின் கணக்கில் சேர்ப்பிக்கும். இது பணம் பெற வேண்டிய வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும். பணம் பெறுபவர் செய்ய வேண்டுவது ஒன்றுமே இல்லை.

என் ஈ எஃப் டி எனப்படும் டிரான்ஸ்ஃபர் முறை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ரூ. 2 லட்சம் வரையான பணமாற்றங்களுக்கு இம்முறையே பயன்படுகிறது. பணம் அனுப்புபவர் வங்கி சென்றோ ஆன்லைன் மூலமாகவோ வங்கிக்கு பணமாற்றத்துக்கான ஆணை கொடுக்கலாம். ஒரு நாளில் ஆறு அல்லது ஏழு முறை இதற்கான கிளியரிங் ரிசர்வ் வங்கியில் செயல்படுகிறது. பணமாற்றம் செய்பவரின் வங்கியின் கணக்கிலிருந்து பணம் பெறுபவா¢ன் வங்கியின் கணக்குக்கு பணமாற்றம் செய்யப்படுகிறது. கிளியரிங் முடிந்த உடன் பெற வேண்டியவான கணக்குக்கு பணம்  போய்ச்சேருகிறது. சில மணி நேரங்களில் பணம் போய்ச்சேரும்.

ஆர் டி ஜி எஸ் எனப்படும் டிரான்ஸ்ஃபர் முறை ரூ. 2 லட்சத்துக்கு மேலான பணமாற்றங்களுக்குப் பயன்படுகிறது. என் ஈ எஃப் டி போலவே இதிலும் பணம் அனுப்புபவர் வங்கி சென்றோ ஆன்லைன் மூலமாகவோ வங்கிக்கு பணமாற்றத்துக்கான ஆணை கொடுக்கலாம். ஆனால், வேறுபாடு என்னவென்றால் என் ஈ எஃப் டி போல் அல்லாமல் இம்முறையில் கிளியரிங் அவ்வப்பொழுது செயல்படுவதில்லை. பணம் அனுப்புபவரின் வங்கியின் கணக்கிலிருந்து பணம் பெறுபவரின் வங்கியின் கணக்குக்கு பணமாற்றம் ஒவ்வொரு டிரான்ஸ்ஃபருக்கும் ஒவ்வொரு முறை தனித்தனியாக செய்யப்படுகிறது. இதனால் கால தாமதம் இல்லாமல் உடனுக்குடன் பெற வேண்டியவரின்  கணக்குக்குப் பணம் போய்ச்சேருகிறது.

சில சந்தர்ப்பங்களில் நிறுவனங்கள் ஒரே சமயத்தில் பலருக்குப் பணம் அனுப்ப நேரிடலாம். சம்பளப் பட்டுவாடா, பங்குதாரர்களுக்கு லாபத்திலிருந்து டிவிடெண்ட் பட்டுவாடா போன்றவை செய்ய ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் பண மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்.



இ சி எஸ் (கிரெடிட்) எனப்படும் எலெக்ட்ரானிக் கிளியாரிங் சர்வீஸ் முறையில் இதைச் செய்யலாம். நம்முடைய வங்கிக்குப் பணம் பெற வேண்டியவர்களின் கணக்கு எண், வங்கிக் கிளை எண், அனுப்ப வேண்டிய தொகை போன்றவற்றைப் பட்டியல் போட்டுக் கொடுத்து விட்டால் நம் வங்கி பணம் பெற வேண்டியவர்களின் வங்கிக்கு இந்த விவரங்களையும், மொத்தத் தொகையையும் அனுப்பி வைக்கிறது. சம்பந்தப்பட்ட வங்கிகள் பணம் பெற வேண்டியவர்கள் கணக்கில் வைப்பு செய்கின்றன.

சில சந்தர்ப்பங்களில் இதற்கு மாறாக பலர் ஒரே நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இ ஸி எஸ் (டெபிட்) முறையில் இதைச் செய்யலாம். நம்முடைய மாதாந்திர பில் தொகையைப் பொருத்து பில்லின் ஒரு உச்ச வரம்பை நாமே நிர்ணயிக்க வேண்டும்.

நம்முடைய வங்கிக்கு நம் கணக்கில் இந்த உச்சவரம்புத் தொகை வரை ஒவ்வொரு முறையும் நம்மைக் கேட்காமல் எடுக்க இசைவு அளிக்க வேண்டும். இந்த இசைவின் நகலை வங்கியின் ஒப்பத்தோடு தொலைபேசி, மின்சார வாரியம்  போன்ற கட்டணம் பெற வேண்டிய நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் இந்நிறுவனங்கள் மாதந்தோறும் நம்மைத் தொந்தரவு செய்யாமல் தாமே நம் வங்கிக்கு அந்த மாதம் செலுத்த வேண்டிய தொகையைத் தெரிவிப்பார்கள். நம் வங்கியும் தொகை நாம் அங்கீகரித்த வரம்புக்குள் இருந்தால் நம்முடைய மறு இசைவு தேவை இன்றி பணம் பெற வேண்டிய நிறுவனங்களின்  வங்கிகள் வழியாக அந்தத் தொகையைச் செலுத்தி விடும்.    

இம்முறையில் பில் கட்டணம் சில மாதங்கள் அதிகமாக இருந்தாலும் நம்முடைய கணக்கில் இருந்து எடுத்த பின்னரே தெரிய வருவது ஒரு குறைபாடு. எனினும் எடுக்கும் தொகைக்கு ஒரு வரம்பு உள்ளதாலும், நம்பிக்கைக்குய நிறுவனங்களுக்கே இது போன்ற இசைவு கொடுக்கப்படுவதாலும் பெரும் அளவில் தவறு நடக்க வாய்ப்பில்லை.

ஆன்லைனில் பொருள் வாங்குபவரா நீங்கள்? உஷார் தகவல்கள்

ஆன்லைனில் பொருள் வாங்குபவரா நீங்கள்? உஷார் தகவல்கள்...!


ஆன்லைனில் பொருள் வாங்குபவரா நீங்கள்? உஷார் தகவல்கள்...!

என்னால் தேடிச்சென்று கடை கடையாய் ஏறி இறங்கி பொருள்கல் வாங்க முடியாது, நான் ஆன்லைனில் தான் பொருள் வாங்குவேன் என்பவரா நீங்கள்? நீங்கள் பொருள் வாங்கும் போது என்னென்ன தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அதை எவ்வாறு எல்லாம் தவிர்க்கலாம் என்பது குறித்த ஐடியாக்கள் இதோ...

என்னென்ன தவறுகள் :

நீங்கள் வீட்டில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்பவராக இருந்தால் நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளம் நம்பகத் தன்மையானது தானா? என சரிபார்த்து வாங்குங்கள். இல்லையெனில் உங்கள் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.

நீங்கள் ஏதாவது ப்ரௌசிங் சென்டரில் இருந்து ஆர்டர் செய்பவராக இருந்தால் அங்கு ஸ்கிரீன் கேப்சரிங் தொழில்நுட்பமோ அல்லது சில மென்பொருட்களை பயன்படுத்தியோ உங்கள் பாஸ்வேர்டு அல்லது கிரெடிட் கார்டு தகவல்கள் திருடப்படலாம். கூடியவரையில் நீங்கள் ஆர்டர் செய்ய ப்ரௌசிங் சென்டர்களை தவிர்ப்பது நல்லது.

சில சமயம் மொபைல் ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது அதன் விதிமுறைகளை சரியாக படித்து பாருங்கள்...சில ஆப்ஸ்கள் உங்கள் தகவல்களை கன்சல்டன்ஸி நிறுவனங்களுக்கு விற்றுவிடும். மற்றும் உங்கள் பர்சனல் தகவல்களான மொபைல் நம்பர், இமெயில் ஐடி, கிரெடிட் கார்டு நம்பர் போன்ற தகவல்கள் இது போன்ற ஆப்ஸ்களால் பகிரப்பட வாய்ப்பு உள்ளது.

நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளத்திலோ அல்லது ஆப்ஸோ அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் ஒருமுறையாவது படித்துப் பாருங்கள். ஒருவேளை உங்கள் தகவல் திருடப்பட்டது என நீங்கள் வழக்கு தொடர்ந்தால் அதற்கு அவர்கள் நீங்கள் ஒத்துக்கொண்ட விதிமுறைகளை காரண்ம் காட்டி விடுவார்கள்.

எப்படி தவிர்க்கலாம்?:

1. நீங்கள் பொருள் வாங்கும் இணையதளத்தில் இருக்கும் நிபந்தனைகள் விதிமுறைகளை படித்துவிட்டு அது திருப்திகரமானதாக இல்லையெனில் அந்த தளத்தில் ஆர்டர் செய்யாதீர்கள்.

2.அவசியம் என்றால் மட்டும் ப்ரௌசிங் சென்டருக்கு சென்று ஆர்டர் செய்யுங்கள். அப்படி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றி விடுங்கள்.

3. உங்கள் ப்ரௌசரில் கடையாக பயன்படுத்திய இணைய தளங்களின் பட்டியல், அதன் ஹிஸ்டரி பதிவில் இருக்கும். அதை டெலிட் செய்தால் உங்கள் பாஸ்வேர்ட், கிரெடிட் கார்டு நம்பர் ஆகியவை அழிக்கப்பட்டுவிடும்.

வங்கிகள் அளிக்கும் கடன் வசதிகள்... பற்றி உங்களுக்கு தெரியுமா

வங்கிகள் அளிக்கும் கடன் வசதிகள்..



நம் வரவுக்குள் செலவு அடங்கும் போது நாம் சேமிக்கிறோம். விரும்பியோ விரும்பாமலோ வரவை விட செலவு அதிகமாகவும் போகலாம். ஆனால் அப்படி நேர்ந்தாலும் நாளை அதிக வரவுக்கு வழி இருக்கிறது என்று நம்புபவர்கள் இன்று கடன் வாங்கி நாளை அதை அடைக்க முயல்கிறார்கள். இன்னும் சிலருக்கு பணத்தட்டுப்பாடு இல்லை. ஆனாலும் கடன் வாங்கி  தொழில்களிலோ, வியாபாரத்திலோ முதலீடு செய்து லாபம் பார்த்து கடனை அடைக்கின்றனர்.

ஒரே மனிதர் தன் வாழ் நாளில் வெவ்வேறு சமயங்களில் இந்த மூன்று வேறு நிலைப்பாடுகளில் இருப்பதும் அமையலாம். இவ்வாறு சேமிப்பவர்களுக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் இடையே வங்கிகள் பாலமாக அமைகின்றன. சேமிப்பவர்களிடமிருந்து பெறும் வைப்புத் தொகையை கடன் வேண்டுபவர்களுக்கு அவர்களுடைய பணத் தேவைக்கும் பணத்தைத் திருப்பித்தர வேண்டிய கால அவகாசத் தேவைக்கும் ஏற்ப வங்கிகள் கடன் வழங்குகின்றன.

கடன் வசதிகளை வெவ்வேறு விதமாகப் பிரிக்கலாம்.

கடனுக்கும் ஈடாக வாங்கும் பொருளைப் பொருத்து

பொருட்களை அடமானம் வைத்தோ அல்லது வேறு விதமாக ஈடாகக் கொடுத்தோ கடன் பெறுவது ஒரு வகை - செக்யுர்ட் லோன் (ஈட்டுக் கடன் என்று அழைக்கலாம்).

வீடு, கார் வாங்கப் பெறும் கடன்கள், தங்க நகைகளை அடமானம் வைத்துப் பெறும் கடன்கள் போன்றவை இத்தகையானவை. கடனைத் திருப்பித்தராவிட்டால் ஈடு வைத்த பொருளை விற்று பணமாக்கி, அதனால் கடனை அடைக்கும் அதிகாரத்தை கடன் கொடுக்கும் முன்னரே வங்கிகள் எழுத்து மூலம் பெற்றுக் கொள்கின்றன.

ஒரு பொருளையும் ஈடாகக் கொடுக்காமல் கடன் பெறுபவா¢ன் கடன் திருப்பும் திறனை மட்டுமே நம்பிக் கொடுக்கப்படுபவை இன்னொரு வகை. கல்விக் கடன், பெர்சனல் லோன் எனப்படும் தனி நபருடைய சொந்தச் செலவுகளுக்கான கடன், கிரெடிட் கார்ட் கடன் போன்றவை இவ்வகையானவை. (கிரெடிட் கார்ட் மூலம் செலவு செய்யும் தொகையைத் திருப்பிச் செலுத்த நமக்கு அவகாசம் கொடுப்பது ஒரு வகையான கடனே)     கடன் வழங்கும் முறை பொருத்து

சுழலும் கடன்கள்:

இவ்வகைக் கடன்களில் வங்கிகள் கடன் தொகைக்கு ஒரு வரையறையை மட்டுமே நிர்ணயிக்கின்றன. இந்த வரையறைக்குள் வாடிக்கையாளர்  எவ்வளவு கடன் வேண்டுமோ அவ்வளவு கடன் எடுத்துக் கொள்ளலாம். எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

கடன் கணக்கில் வரவு வைத்தாலும் மறுபடியும் வரையறை வரை கடன் பெறலாம். கடன் நிலுவை குறையலாம் அல்லது கூடலாம். சில நேரங்களில் கடன் கணக்கில் நிலுவையே இல்லாமல் வாடிக்கையாளர் பெயரில் வைப்புத் தொகை இருக்குமாறும் நேரலாம். ஆனால் இதனால் கடன் வரையறை வரை கடன் எடுக்கும் உரிமை பாதிக்கப்படாது.

எடுத்துக்காட்டாக ஒருவர் வங்கியிடமிருந்து ரூ. 1 லட்சம் கடன் பெறுவதாக வைத்துக் கொள்வோம். கடன் ஒப்பந்தம் கையெழுத்தான அன்றே அவர் 1 லட்சம் ருபாயையையும் எடுத்துக் கொள்ளலாம். ரூ. 10 ஆயிரம் மட்டும் தேவைப்பட்டால் அவ்வளவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ரூ. ஒரு லட்சம் எடுப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு வாரம் சென்ற பிறகு அவர் கையில் ரூ. 20,000 பணம்  வந்தால் நிலுவை ரூ. 80,000 ஆகி விடும். இப்பொழுது அவர் ரூ. 20,000 வரை எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதிருஷ்டவசமாக ரூ. 2 லட்சம் வந்தால் நிலுவையே இல்லாமல் வைப்புத்தொகை ரூ. 1 லட்சம் ஆகி விடும். ஆனால் இதனால் அவருடைய கடன் பெறும் தகுதி பாதிக்கப்படாது. இப்பொழுது அவர் ரூ. 2 லட்சம் வரை எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

கடன் வாங்கும்பொழுது ஒப்புக் கொண்ட நிபந்தனைகளையும் ஒப்பந்த விதிமுறைகளையும் தொடர்ந்து அனுசரிக்கும் வரை வாடிக்கையாளர் கடன் சேவையைத் தொடர்ந்து அனுபவிக்கலாம். கிரெடிட் கார்ட் கடன்கள், இருப்புக்கு மேல் பணம் எடுக்கும் உரி மையை அளிக்கும் ஒவர் டிராஃப்ட் கணக்குகள் இவ்வகையானவை. தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் கேஷ் கிரெடிட் என்று சொல்லப்படும் நடப்புக் கடன் கணக்குகளும் ஒவர் ட்ராஃப்ட் களே ஆகும்.

இந்நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்குத் தேவையாகும்போது பணம் எடுக்கலாம். பண வரவு அதிகமாக இருக்கும் பொழுது வைப்பும் செய்யலாம். கடன் வரையறைக்குட்பட்டு தொழிலின் தேவைக்கேற்ப நிலுவை இருக்க வேண்டும்.

நடப்புக் கணக்குகளைப் போன்று இவ்வகைக் கடன் கணக்குகளிலும் காசோலைகள், கிரெடிட் கார்டுகள், ஆன்லைன் வசதிகள் போன்றவை கிடைக்கும். கடன் வசதி மட்டுமில்லாமல் பணம் போட்டு, பணம் எடுத்து, பண மாற்றம் செய்து சேவை பெறலாம்.

சுழலாக் கடன் இன்னொரு வகை. இவற்றில் கடன் பெறுவதற்கான காலம் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. பொதுவாக கடன் பத்திரம் கையெழுத்தாகி 6 மாதத்திற்குள்ளோ, ஒரு வருடத்திற்குள்ளோ அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை எடுத்தே ஆக வேண்டும். அதற்குப் பிறகு கடன் பட்டுவாடா கிடைக்காது. திருப்பிச் செலுத்தும் தவணை முறை துவங்கி விடும். மாரடோரியம் என்று சொல்லப்படும் கடனைக் கால தாமதமாகக் கொடுப்பதற்கான இசைவு பெற்றிருந்தால் இந்த தாமதத்திற்குப் பிறகு தவணை துவங்கும். தவணை துவங்கிய பிறகு கட்டிய பணத்துக்கு ஈடாக மறுபடியும் பணம் எடுக்க இவ்வகைக் கடன்களின் விதிமுறைகள் அனுமதிப்பதில்லை.

தவணைகளைத் தொடர்ந்து கட்டி, கடனை அடைப்பதே செய்யக் கூடியது. வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன் இவைகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இவ்வகைக் கணக்குகளில் காசோலை, ஏ டி எம் கார்ட், ஆன்லைன் போன்ற சேவைகள் கிடைக்காது. வாடிக்கையாளர் பணம் எடுக்கவோ பணமாற்றம் செய்யவோ இயலாது.

Basic Course - Share Market Classes

Basic Course - Share Market Classes


Click Here  & Register - Share Market Training
Stock Market Training for beginners,Technical Analysis on Equity,Commodity,Forex Market,Learn Indian Equity Share Market Share Market Trading Basics: Fundamentals Of Share Market Trading training, Stock Market Basics - Share Market Trading Basics,Share Market Trading Questions/Answers/Faq about Share Market derivatives,rupeedesk,learn and earn share Equity,Commodity and currency market traded in NSE,MCX,NCDEX And MCXSX- Rupeedesk.Contact: 9094047040/9841986753/ 044-24333577, www.rupeedesk.in)

How do I redeem my FD?

How do I redeem my FD?

After maturity of your FD, you can walk into any Bank across the country and claim your deposit by furnishing your Fixed Deposit receipt/Memorandum of Deposit.

Click Here  & Register - Share Market Training

Does a high interest rate offered on a fixed deposit represent a good investment?

Does a high interest rate offered on a fixed deposit represent a good investment?


The interest rate that is offered on a fixed deposit by the borrowing institution helps provide an insight into the position of the entity. If the financial condition is very strong then the institution can raise funds by offering a low rate while a high rate has to be offered to the investors to get them to consider the investment given the slightly higher risk involved.


Click Here  & Register - Share Market Training

Do Senior citizens get any extra benefit on the FD?

Do Senior citizens get any extra benefit on the FD?


Yes, they do get extra benefits in the form of higher interest rates.

சென்னையில் வேலைக்கு ஆட்சேர்ப்பு எப்படி? சர்வே முடிவு!

சென்னையில் வேலைக்கு ஆட்சேர்ப்பு எப்படி? சர்வே முடிவு!

ஆன்லைன் வழியாக பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் விஸ்டம்ஜாப்ஸ்.காம் சென்னையில் வரவிருக்கும் 6 மாதங்களில் நிறுவனங்களின் துறை ரீதியிலான பணிக்கு ஆட்சேர்ப்பு போகுகள் குறித்த சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், எஃப்எம்சிஜி, உற்பத்தி மற்றும் பொறியியல், ரீடெய்ல், தொலைதொடர்புத்துறை, உடல்நல பராமரிப்பு மற்றும் மருந்துத் தயாரிப்பு மற்றும் இ-காமர்ஸ் உட்பட பல்வேறு துறைகளில் சென்னையில் ஏறக்குறைய 84 நிறுவனங்களை உள்ளடக்கியதாக இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் பேரழிவை ஏற்படுத்திய மழைவெள்ளத்திற்கு பிறகு இம்மாநகரில் உள்ள நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகளை அதிகரித்திருப்பதாக விஸ்டம்ஜாப்ஸ்.காம் மேற்கொண்ட ஆய்வு கண்டறிந்திருக்கிறது. சென்னையில் கடந்த ஆண்டு காணப்பட்ட நிலைகள் இந்த ஆண்டில் நிகழும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் எட்டது என்றபோதிலும்கூட, பெரும்பாலான முக்கிய துறைகளில் வேலைவாய்ப்புகளை தேடுகின்ற நபர்களுக்கு வரவிருக்கும் மாதங்கள் சிறப்பானதாகவே இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் பணிக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, தகவல் தொழில்நுட்பத்துறை, ஆட்டோமோட்டிவ் மற்றும் உற்பத்தித்துறை ஆகியவற்றைச் சேர்ந்த நிறுவனங்களில் எப்போதுமே நம்பிக்கை தருவதாகவும், ஏறுமுகமாகவுமே இருந்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே கால அளவோடு ஒப்பிடுகையில், பிற முக்கிய துறைகளில் பணிக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை எவ்வித மாற்றமின்றி அதே அளவுகளில் இருக்கும் அல்லது ஓரளவு சரிவை சந்திக்கக்கூடும் என்று விஸ்டம்ஜாப்ஸ்.காம்-ன் நிறுவனர் அஜய் கோல்லா தெரிவித்துள்ளார்.

பிளேஸ்மென்ட் போர்... ஜெயிக்கும் சூட்சுமம்!

பிளேஸ்மென்ட் போர்... ஜெயிக்கும் சூட்சுமம்!

கரு உருவான முதல் வாரமே, தன் பிள்ளைக்கு தரமான பள்ளியைத் தேடத் தொடங்கும் பெற்றோர்களே நம் நாட்டில் அதிகம். எல்கேஜி முதல் கல்லூரி வரை என 21 வருடம் அந்தக் குழந்தையை நன்றாக வளர்த்தெடுக்கக் காரணம், கல்லூரி இறுதி ஆண்டில் நடக்கும்  பிளேஸ்மென்ட் போரை தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டும் என்பதற்காகத்தான்.

இப்படி ஒரு இளைஞனின்  வெற்றியை கொண்டாட ஒரு குடும்பமே காத்திருக்க, ‘இந்த கம்பெனி போனா இன்னொரு கம்பெனி' என்கிற மாதிரிதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படி இல்லாமல் வேலை தரும் நிறுவனங்கள் கல்லூரிக்குள் மாணவர்களைத் தேடி வரும்போது அதைத் தைரியமாக எதிர்கொண்டு வேலையைப் பெற்று, அதைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வது என்பது முக்கியமான விஷயம்.  பிளேஸ்மென்ட் சமயத்தில் எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விப்ரோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் விஸ்வநாதனிடம் பேசி னோம். அவர் தந்த  டிப்ஸ்கள் இங்கே உங்களுக்காக..



அடிப்படை அறிவு அவசியம்!

“உங்களை வேலைக்காகத் தேர்வு செய்யும்போது, நிறுவனங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம், உங்கள்  துறையில் உங்களுக்கு இருக்கும் அடிப்படை அறிவுதான். அது சார்ந்த கேள்விகளை உங்களிடம் கேட்கும்போது உங்களுக்குள்ள புரிதல், அதற்காக நீங்கள் தரும் நம்பிக்கையான பதில் ஆகியவை தான்.

இதை முதலாவதாக சொல்லக் காரணம், வேலை சார்ந்து உங்களுக்குச் சொல்லித்தரும் போது அதை சரியாகக் கற்றுக் கொண்டு வேலையில் ஈடுபடுவீர்களா என்பதை அறியத்தான்.

சிந்தனைக்கான பரிசோதனை!

அடுத்ததாக உங்களின் சிந்தனையைப் பரிசோதிப்ப தற்கானத் தேர்வைத்தான் பெரும்பாலானநிறுவனங்கள் கையாள்கின்றன. ஒரு கடினமான சூழ்நிலையை உங்களுக்குச் சொல்லி, அந்த இடத்தில் உங்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்கிற மாதிரியான கேள்விகளை உங்கள் முன் வைப்பார்கள்.

இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதில் சொல்கிறீர்களா என்பதைவிட, இக்கட்டான சூழ்நிலைகளில் நீங்கள் செயல்படும் விதம், அந்த விஷயத்தை அணுகும் முறை ஆகியவைதான் கவனிக்கப்படும். அந்த பிரச்னையைத் தீர்க்க நீங்கள் என்ன மாதிரியான யுக்திகளைக் கையாள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.  அதனால் இந்தத் தேர்வில் உங்களை நிரூபித்தாக வேண்டியது அவசியம் அதிகமாகும்.

ஆங்கிலப் புலமையும், ஆட்டிட்யூடும்!

வேலைக்காக ஒருவர் தேர்வு செய்யும்போது ஆங்கிலப் புலமை அவசியம். சரளமாகப் பேச அல்லது எழுதத் தெரியாவிட்டாலும்   தங்களது வாடிக்கையாளரின் ஆங்கில மொழி புலமைக்கு ஈடுதரும்  அளவுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றுதான்  நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

மேலும் ஒரு துறை என்பது எப்போதும் அப்படியே இருந்து விடாது. புதுப்புது டெக்னாலஜி, புதுப்புது மாற்றங்கள் என வளர்ந்துகொண்டே இருக்கும். அதனால் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்கள் ஒருவர் துறை சார்ந்து தங்களை எந்த அளவுக்கு அப்டேட்டாக வைத்திருக்கிறார் என்பதைக் கவனித்து, அதில் திருப்தி அடைந்தால்தான் வேலை தரும்.

மேலே சொன்ன எல்லாவற்றுக்கும் இணையானது ஆட்டிட்யூட்(Attitude). நீங்கள் கம்பெனியில் சேர காட்டும் விருப்பம், உங்களின் ஈடுபாடு இவையே  நிறுவனங்களின் முதன்மையான எதிர்பார்ப்பு. இவை தவிர உடை, நேரம் தவறாமை, ஒழுக்கம் போன்ற வற்றுக்கும் இணையான பங்களிப்பு உண்டு'' என்று முடித்தார்.

இப்படியான தகுதிகளை  மெருகேற்றிக்கொள்ள நாம் செய்யவேண்டியவை பற்றி டிப்ஸ் தந்தார் கோவையைச் சேர்ந்த பிளேஸ்மென்ட் ட்ரைனர், பிரபு (SIX PHRASE TRAINING ACADEMY).

பலம், பலவீனம்!

“செலக்‌ஷன் பிராசஸின் முதல் கட்டம் ஆப்டிடியூட். பொதுவாக கிராமப்புற பின்னணியில் இருந்துவரும் மாணவர்களுக்கு வெர்பல் (verbal) சரியாக வராது. ஆனால் அவர்களால் குவாண்ட்ஸ்-ல் (quantitative) சிறப்பாகச் செயல்பட முடியும். ஆனால், நகர்ப்புற  மாணவர்கள் வெர்பலில்  சிறந்து விளங்கினாலும், குவாண்ட்ஸ்-ல் கொஞ்சம் பின்தங்கியே இருப்பார்கள்.

முதலில் உங்களின் பலம் மற்றும் பலவீனத்தைக் கண்டுபிடியுங்கள். அதைக் கண்டுபிடித்தபிறகு குறைவாக இருப்பதை ஆவரேஜ் ஆகவும், ஆவரேஜாக இருப்பதை எக்‌ஸலன்டாகவும் மாற்ற முயற்சி செய்யுங்கள். இதை நேர்மையாகச் செய்தாலே கம்பெனிக்குள் நீங்கள் நுழைவது உறுதி.

இதுவே இறுதி வாய்ப்பு!

நீங்கள் ஒரு நிறுவனத்துக்கு  இன்டர்வியூக்கு சென்றால்,  இதுதான் என் கடைசி நிறுவனம், இதைவிட்டால் எனக்கு வேறு எதுவுமில்லை என்கிற ஒரு சின்ன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது கண்டிப்பாக உங்களை மிகச் சிறப்பாகச் செயல்பட வைக்கும்.

ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

வேலைக்கான மந்திரச் சாவி யான ரெஸ்யூம் உங்களைப் பற்றி நம்பிக்கையான பிம்பத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அதிலிருந்துதான் உங்களுக்கான கேள்விகள் கேட்கப்படும்.

அப்டேட் அவசியம்!

நம்மைச் சுற்றி எத்தனையோ புதுப்புது டெக்னாலஜி, மாதம் ஒரு புது கோடிங் லாங்குவேஜ் என்று நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. அதையெல்லாம் ஒரு போட்டி மனப்பான்மையுடன் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெரும்பாலும் நிறுவனங்களே உருவாக்கித் தருகின்றன.

புதிதாகக் கற்றுக்கொள்ளும் பட்சத்தில் உங்களுக்குப் போட்டிகள் பற்றிய  பயத்தினைப் போக்கி  தெளிவை ஏற்படுத்தும்.

வேலையில்லா பட்டதாரியும் விஐபி தான். வெரி இம்பார்டன்ட் பெர்சனும் விஐபிதான். நீங்கள் எப்படி?

வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!


1. செலவைத் திட்டமிடுங்கள்!

பட்ஜெட் போட நினைத்தாலே முதலில் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு இந்த மாதத்துக்கு, இந்த விஷயத்துக்கு இவ்வளவுதான் செலவு என்று எழுதிவிடுகிறோம். ஆனால், மாதக் கடைசியில் பட்ஜெட் போட்ட பேப்பரை எடுத்து அதன்படிதான் நாம் செய்திருக்கிறோமா என்று பார்த்தால், இரண்டும் வேறுவேறு மாதிரி இருக்கும்.



இப்படி பட்ஜெட் போடுவது ஒன்று, செலவு செய்வது வேறு ஒன்று என்று இருந்தால், நீங்கள் போடும் பட்ஜெட் எதிர்பார்த்த பலனைத் தராது. பட்ஜெட் போடும்முன் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக நீங்கள் செய்யும் செலவுகள் என்னவோ, அதை அப்படியே எழுதுங்களேன். அப்போது நீங்கள் எந்த விஷயத்துக்கு அதிக செலவு செய்கிறீர்கள் என்பது அப்பட்டமாகத் தெரியும். எதற்கு அதிகம் செலவு செய்கிறீர்கள் என்பது தெரிந்தால், பட்ஜெட் போடும்போது தேவையான பணத்தை சரியாக ஒதுக்கலாம். அப்போது பட்ஜெட்டுக்கும் செய்த செலவுக்கு வேறுபாடு பெரிதாக இருக்காது.

2. எது சாத்தியமோ, அதைச் செய்யுங்கள்!

அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர், நாள் ஒன்றுக்கு மூன்று டீ, ஒரு பாக்கெட் பிஸ்கெட் என்று நாள் ஒன்றுக்கு ரூ.50 செலவழிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த மாதத்திலிருந்து நான் டீ மற்றும் பிஸ்கெட்டை விட்டுவிட்டு, பணத்தை மிச்சப்படுத்தப் போகிறேன் என தடாலடி முடிவெடுத்தால் என்ன ஆகும்? பிறகு ஒரே ஒரு டீ என்று ஆரம்பித்து, பிற்பாடு அது இரண்டாகி, கடைசியில் அது மூன்றில் போய் நிற்கும்.

இதற்கு பதிலாக, அடுத்த மாதத்திலிருந்து ஒரு நாளில் 2 டீ, ஒரு பாக்கெட் பிஸ்கெட் மட்டும் என்று முடிவெடுக்கலாம். அதற்கு அடுத்த மாதத்திலிருந்து 1 டீ, இரண்டு நாட்களுக்கு ஒரு பாக்கெட் பிஸ்கெட் என்று படிப்படியாக செலவைக் குறைத்தால், அது சாத்தியமான விஷயமாகவும் இருக்கும். இதை ஒழுங்காக கடைப்பிடித்தால், ஆபீஸில் டீ குடிப்பதையே விட்டு விடலாம்.



3. குறைந்த விலையில் பர்ச்சேஸ்!

வீட்டுக்கான எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒரே கடையில் அல்லது ஒரே சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவது கூடாது. அதற்கு பதிலாக, நீங்கள் ரெகுலராக பொருட்களை வாங்கும் கடையைவிட விலை குறைவாகவும், தரமானதாகவும் வெளியில் வேறு கடைகளில் கிடைக்கிறதா என்பதை ஓய்வு நாட்களில் சுற்றித் திரிந்து தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக காய்கறிகள், பழங்கள் அழகாக அடுக்கப்பட்டு இருக்கும் ஏசி சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, மொத்த சந்தைகளில் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும். இதனால் மாதாமாதம் பல நூறு ரூபாய் பட்ஜெட்டில் மிச்சமாகும்.

4. கிரெடிட் கார்டு ஜாக்கிரதை!

உங்களுக்கு அத்தியாவசியத் தேவை என்றால் மட்டுமே கிரெடிட் கார்டை வாங்குங்கள். தேவையில்லாமல் கிரெடிட் கார்டை வாங்கி, அந்த கார்டை பயன்படுத்தி எதையாவது வாங்கி கடனைத் திரும்பச் செலுத்தவில்லை என்றால் வங்கிக்கு 45% வட்டி கட்ட வேண்டியிருக்கும். இதனால், உங்கள் சம்பளத்தில் கணிசமான பணத்தை இழக்க வேண்டி இருக்கும். தற்போது உங்களுக்கு கிரெடிட் கார்டு கடன் பாக்கி இருந்தால், எப்பாடுபட்டாவது முதலில் அந்தக் கடனை திரும்பக் கட்டிவிடுங்கள். அப்போதுதான் வட்டியாக செலவழியும் பணம் உங்களுக்கு மிச்சம் ஆகும்.

5. விரலுக்கேத்த வீக்கம்!

உங்கள் வருமானம் எவ்வளவோ, அந்த அளவுக்கு உங்கள் செலவை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கினால், நீங்கள் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்க நினைப்பது நியாயம். ஆனால், ஆடியையோ, பி.எம்.டபிள்யூ காரையோ வாங்க நினைத்தால், அது விரலுக்கேத்த வீக்கமாக இருக்காது. இது கார் விஷயத்தில் மட்டும் அல்ல, வீட்டின் ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் நம் தகுதியை நினைத்துக்கொண்டு செயல்படுவது அவசியம். பக்கத்து வீட்டுக்காரர்கள் இதை வாங்கிவிட்டார்களே, அதை வாங்கிவிட்டார்களே என்று நினைக்காமல், நமக்கு என்ன தேவையோ, நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ, அந்த அளவுக்கு மட்டுமே செலவு செய்வது நல்லது.

6. கடமைகளும் இலக்கும்!

உங்கள் நிதி சார்ந்த கடமைகள் வேறு; இலக்குகள் வேறு. உங்கள் குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்றவை உங்கள் நிதி சார்ந்த கடமைகள். அதை உங்களால் தவிர்க்க முடியாது. அதற்கான முதலீட்டை நீங்கள் செய்துதான் ஆகவேண்டும். ஆனால், சொந்த வீடு, கார் வாங்குவது போன்றவை எதிர்கால இலக்குகள். இவற்றுக்காகவும் முதலீடு செய்வது அவசியம் என்றாலும் கட்டாயம் அல்ல.



 நீங்கள் பட்ஜெட் போடும் போது முதலில் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலீடு செய்யுங்கள். இந்த கடமை முடிந்தபின்பு, உங்கள் எதிர்கால இலக்குகளுக்கும் முக்கியத்துவம் தந்து, முதலீட்டைத் தொடங்குங்கள். இதன் மூலம் உங்கள் எதிர்காலத் தேவைகளுக்கான தொகை சேர்ந்துகொண்டே இருக்கும். கடமைகளைப் பற்றியும் எதிர்கால இலக்குகள் பற்றியும் நீங்கள் எந்தக் கவலையும் படவில்லை என்றால், இன்றைக்கு உங்களால் தாராளமாக செலவு செய்ய முடியும். ஆனால், எதிர்காலத்தில் உங்கள் தேவைகளை சரியாக நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவிப்பீர்கள். இந்த சிக்கல் உங்களுக்கு வராமல் இருக்க, உங்கள் கடமைகளையும் எதிர்கால இலக்குகளையும் மறந்துவிடாதீர்கள்.

7. பட்ஜெட்... அப்டேட்!

சில நேரங்களில் பொருட்களின் விலை அதிகரிக்கும்போது நீங்கள் போட்டுள்ள பட்ஜெட் சரிபட்டு வராததாக இருக்கலாம். இருப்பினும் நீங்கள் போட்ட பட்ஜெட்டின்படியே செலவுகளை மேற்கொள்ளுங்கள். இப்படி கட்டுப்பாடாக இருப்பதால், உங்கள் எதிர்கால இலக்குகள் எந்தக் குறைபாடும் இல்லாமல் நிறைவேறும். இதனுடன் பண வரவுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். உங்கள் வருமானம் அதிகரித்திருக்கும் போது மட்டும் உங்கள் பட்ஜெட்டை மாற்றுங்கள். அதிலும் செலவுகளை அதிகப்படுத்துவதைவிட சேமிப்பை அதிகப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறப்பு.

8. சர்வாதிகாரம் வேண்டாமே!

இன்று பலரது வீட்டில் கணவன் அல்லது மனைவி என்று யாராவது ஒருவர்தான் பட்ஜெட் போட்டு மொத்த குடும்பத்துக்கான செலவு களையும் நிர்வகித்து வருகின்றனர். இப்படி நிர்வகிப்பதால் குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். பணத்தை நிர்வகிப்பவர் குடும்பத்தின் மீது சர்வாதிகாரம் செலுத்துவதாக தோன்றும்.

எனவே, இரண்டு பேரும் சேர்ந்து பணத்தைக் கையாளுவது சிறப்பாக இருக்கும்; அதே நேரத்தில் செலவுக்கான வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும். முக்கியமாக, பட்ஜெட் போடும்போது குழந்தைகளையும் அருகில் வைத்துக்கொள்வது நல்லது.

9. எமர்ஜென்சி ஒதுக்கீடு!

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அவசரச் செலவுக்கு என ஒரு தொகையை ஒதுக்கி ரிசர்வில் வைத்துவிடுவது நல்லது. இந்த எமர்ஜென்சி பணத்தை அவசர மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மருத்துவச் செலவு எதுவும் வரவில்லை எனில், திருமணத்துக்கான மொய் எழுதுவது, அன்பளிப்பு வழங்குவது, வாகனப் பராமரிப்பு செலவுகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

10. ஒதுக்கீட்டில் உறுதி!

வார இறுதியில் குடும்பத்துடன் நல்ல ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதற்கு ஒரு தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒதுக்கிய தொகை தீர்ந்துவிட்டது. ஆனால், மீண்டும் ஒருமுறை ஓட்டலுக்கு அழைத்துச் செல்லும்படி உங்கள் குழந்தைகள் வற்புறுத்துகிறார்கள் என்றால், கேஸ் சிலிண்டருக்காக ஒதுக்கிய பணத்தை எடுத்து, ஓட்டலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. திடீரென கேஸ் சிலிண்டர் வந்துவிட்டால், பணத்துக்கு அலைய வேண்டியிருக்கும். அல்லது கடன் வாங்க வேண்டியிருக்கும். இது மாதிரியான தர்மசங்கடங்களைத் தவிர்க்க, எந்த செலவுக்காக பணத்தை ஒதுக்கி இருக்கிறீர் களோ, அதற்கு மட்டுமே அந்த பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்!

பட்ஜெட் போடும்போது இத்தனை விஷயங்களை கவனிக்க முடியுமா என்று மலைக்காதீர்கள். உங்களிடம் கொஞ்சம் ஒழுங்கு இருந்தாலே போதும், இதை எளிதாக செய்துமுடிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.

படிவம் 16 இல்லாமல், வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி முடியும்?

படிவம் 16 இல்லாமல், வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி முடியும்?


தவணைத் தேதிக்குள் படிவம் 16 (Form 16) தரத் தவறினால் நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. (நிதி ஆண்டு 2015-16க்கு தவணை நாள் 31.05.2016). இருந்தபோதிலும் சில நிறுவனங்களில் குறித்த காலத்தில் படிவம் 16 பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
இத்தகைய சூழலில் வரித் தாக்கல் செய்ய படிவம் 16 கட்டாயமா? இல்லையென்றால் வரித் தாக்கல் செய்வது எப்படி? என்ற பல்வேறு கேள்விகள் நம்முன்னே நிற்கின்றன.
படிவம் 16 கட்டாயமில்லை..!
படிவம் 16 என்பது வரிக்கு உட்பட்டவரின் மொத்த ஆண்டு வருமானம், 80சி மற்றும் இதர பிரிவுகளின் கீழ் வரி கழிவுகள் என நாம் அறிந்த மற்றும் நாம் கொடுக்கும் தகவல்களின் தொகுப்பே தவிர அதில் வேறொன்றும் புதிய தகவல்கள் இல்லை. எனவே படிவம் 16யை நாமே உருவாக்கும் முறையும் அதன் மூலம் வரித் தாக்கல் செய்யும் வழிமுறையும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

கட்டிய வாடகை - 10% சம்பளம்

உதாரண கணக்கு:
 


அ) நீங்கள் பெற்ற வாடகைப்படி ரூ. 5000 x 12)



60000


ஆ) 50% சம்பளம் (ரூ.10,000 + 5000) X 12) = 1,80,000


ரூ.1,80,000 X 50%



90000


இ) வாடகை கட்டியது {ரூ. 6000 X 12} (-) 10% சம்பளம் (1,80,000 X 10%) = 18000. 70.000-18.000 = 54,000




54000






எனவே, வரி விலக்கிற்கு உட்பட்ட ஹெச்ஆர்ஏ ரூ. 54,000 மற்றும் மீதமுள்ள (60000 - 54000) ரூ. 6,000- திற்கு வரிக் கட்ட வேண்டும்.

2. வீட்டு வாடகை வருமானம் (Income from House Property)

வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி குடியிருந்தால் வருமானம் எதுவும் இருக்காது. ஆனால், வீட்டுக் கடனுக்கான வட்டியை நஷ்டமாக கணக்கிட்டு மற்ற வருமானத்தில் (வருமானமா? மற்ற வருமானமா?) இருந்து கழிவு பெறலாம். மாறாக உங்கள் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தால் கீழ்கண்டவாறு கணக்கிட வேண்டும்.

உதாரணம்
வாடகை  மாதம் ரூ. 10,000
நகராட்சி, வரிகள் கட்டியது ரூ.10,000 (வருடத்திற்கு),
வீட்டுக் கடன் வட்டி ரூ. 60,000

அ) வாடகை வருமானம் (ரூ.10,000 X 12) 1,20,000
ஆ) நகராட்சி வரிகள் 10,000
நிகர வருமானம் = 1,20,000 - 10,000
இ) கழிக்க: பிரிவு 24(b) ன் கீழ் கழிவுகள்:

1) நிலைக்கழிவு (Standard Deduction) (1,10,000 X 30%) 33,000

2. வீட்டுக் கடன் வட்டி 60,000

வீட்டு சொத்து வருமானம் (60,000-33,000) = 17,000

படிவம் 16 இல்லாமல் வரித் தாக்கல் செய்யும் வழிமுறைகள்:

1. சம்பள வருமானம்

2015-16 வருடத்திற்கான சம்பள ரசீதை (Payship) சேகரித்து 12 மாதத்திற்கான மொத்த சம்பளத்தை (ஊக்கத் தொகை உட்பட) கணக்கிட வேண்டும். அவ்வாறு கணக்கிடும் போது வரி விலக்கிற்கு உட்பட்ட படிகளை (Allowances) கழித்து வரிக்குட்பட்ட படிகளை மட்டும் சம்பள வருமானத்துடன் கூட்ட வேண்டும்.

பொதுவாக வரிவிலக்கிற்கு உட்பட படிகள்
அ. குழந்தைகள் கல்விப்படி - மாதம் ரூ. 100 வீதம் இரண்டு குழந்தைகளுக்கு.
ஆ. குழந்தைகள் விடுதிப்படி - மாதம் ரூ. 300 வீதம் இரண்டு குழந்தைகளுக்கு.
இ. பயணப்படி - மாதம் ரூ. 1,600 (மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.3. 200)
ஈ. வீட்டு வாடகைப்படி (HRA) கீழ்குறிப்பிட்டவற்றுள் எது குறைவோ அதை கழிவாக பெறலாம்.
1. நீங்கள் பெற்ற வீட்டு வாடகைப்படி
2. உங்கள் சம்பளத்தில் 40 சதவீதம் (சென்னை, மும்பை, கல்கத்தா, புதுடெல்லி ஆகிய மெட்ரோ நகரில் வசிப்பவர்களுக்கு 50%)

இதர வருமானங்கள் (Income from other sources)

நிரந்தர வைப்புத் தொகை (FD) மற்றும் சேமிப்புக் கணக்கு மூலம் பெறப்படும் வட்டி ஆகியவை இப்பிரிவின் கீழ் வருமானமாக கணக்கிடப்படும்.

வருமான வரி கணக்கிடல்

அ) மேற்கண்ட வருமானங்களின் கூட்டுத் தொகை மொத்த வருமானம் எனலாம்.

ஆ) பின் 80சி முதல் 80டிடிஏ வரையிலான பிரிவுகளின் கீழ் கழிவை கணக்கிட்டு மொத்த வருமானத்தில் இருந்து கழிக்க வேண்டும்.
இ) மீதமுள்ள (அ-ஆ) வருமானம் வரிக்குப்பட்ட வருமானம் ஆகும். அவ்வாறு கணக்கிடப்பட்ட வருமானத்தின் மீது வரிக் கணக்கிட வேண்டும். பின்னர் ஏற்கனவே கட்டிய முன் வரி (Advance Tax) மற்றும் மூல வரி (TDS) ஆகியவற்றை கணக்கிட்ட வரியில் இருந்து கழித்து மீதமுள்ள தொகை (ஏதேனும் இருப்பின்) சுய மதிப்பீட்டு வரியாக (self - Assessment Tax) கட்ட வேண்டும்.

ஈ) டிடிஎஸ் மற்றும் முன் வரியை யை படிவம் 26AS வருமான வரி இணையத் தளத்தில் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
மாதிரி கணக்கு


1. சம்பள ரசீது படி சம்பள வருமானம்


கழிக்க: வரிவிலக்கிற்கு உட்பட்ட படிகள்

***




(***)



***


2. வீட்டு வாடகை வருமானம்


(கணக்கிடப்பட்டது)





***



3. இதர வருமானங்கள்





***



4. மொத்த வருமானம் (1+2+3)





***



5. கழிக்க: அத்தியாயம் VI-A கீழ் கழிவுகள் (80C முதல் 80TTA வரை)





(***)



6. வரிக்குட்பட்ட வருமானம் (4-5)







7. கணக்கிடப்பட்ட வரி





***



8. முன்வரி மற்றும் மூலவரி





(***)



மீதம் கட்ட வேண்டிய வரி





***


மேற்கண்ட முறையில் கணக்கிடப்பட்டு வரித் தாக்கல் செய்து அதன்பிறகு படிவம் 16 நீங்கள் பெறும் போது அத்துடுடன் ஒப்பிடலாம். அவ்வாறு ஒப்பிட்ட பின் தவறு அல்லது மாற்றம் ஏதேனும் இருப்பின் திருத்திய வரித்தாக்கல் (Revised Return) செய்ய முடியும்.
அவ்வாறு வரித் தாக்கலை திருத்தம் செய்யும் வாய்ப்பு தவணைத் தேதிக்குள் (ஜூலை 31) கணக்கு தாக்கல் செய்பவர்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோம் இன்ஷூரன்ஸ் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்?

ஹோம் இன்ஷூரன்ஸ் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்?


நம் நாட்டில் ஹோம் இன்ஷூரன்ஸ் பற்றி  முன்னணி நகரங்களில் இருந்து இன்ஷூரன்ஸ் பாலிதாரர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

அதில் ஹோம் இன்ஷூரன்ஸ் விழிப்புணர்வு குறித்தும், ஹோம் இன்ஷூரன்ஸ் வாங்க காரணங்கள் மற்றும் ஹோம் இன்ஷூரன்ஸ் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்? என்ன என்பது குறித்தும் பாலிதாரர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான முடிவுகள்..


ஆறாயிரம் கோடி சொத்து இருந்தும் பேக்கரியில் கூலிவேலை

ஆறாயிரம் கோடி சொத்து இருந்தும் பேக்கரியில் கூலிவேலை - இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை!




தன் தந்தைக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருந்தும் பேக்கரி ஒன்றில் கூலிவேலை செய்து,  நெகிழ வைத்துள்ளார் இளைஞர் ஒருவர். சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

குஜராத் மாநிலத்தின் முன்னணி வைர வியாபாரி சாவ்ஜி தொலாக்கியா. 54 வயதான சாவ்ஜி, ஹரே கிருஷ்ணா என்ற பெயரில் வைரம் மற்றும் ஆபரணப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். சூரத் நகரில் பெரிய கம்பெனி வைத்து நிர்வகித்து வரும் சாவ்ஜி, உலகின் 71 நாடுகளில் வைர வியாபாரம் செய்து குஜராத் மாநிலத்தின் முன்னணி செல்வந்தராக வளம் வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு சிறந்த ஏற்றுமதியாளர் என்ற வகையில் அதற்கான குஜராத் மாநில அரசின் விருதையும் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 6 ஆயிரம் கோடி.

இந்நிலையில் இவரின் மகன் ட்ராவ்யா தொலாக்கியா அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். 21 வயதே நிரம்பிய  ட்ராவ்யா தொலாக்கியாவுக்கு பணம் மற்றும் சமூக அந்தஸ்து, எல்லாவற்றுக்கும் மேலாக உழைப்பின் அருமையைப் புரிய வைக்கவேண்டும் என்று சாவ்ஜி விரும்பியுள்ளார். இதனை மகனிடமும் கூறியுள்ளார். அவரும் தந்தைப் பேச்சிற்கு மதிப்புக்குக் கொடுத்து தந்தையின் சொல்படி நடந்து கொண்டுள்ளார்.

இது குறித்து சாவ்ஜி தொலாக்கியா கூறுகையில், "என்மகனிடம் நான் சொன்னது ஒன்றுதான். வேலை தேடுவதும் அந்த வேலையைத் தக்கவைத்துக் கொள்ள படும் சிரமங்களையும், சம்பாதிக்கும் பணத்தின் முக்கியத்துவத்தையும்  உணர வேண்டும். அதனால் நமது மாநிலம் அல்லாத ஊருக்குச் சென்று உன்னுடைய திறனால்  வேலை தேடி சம்பாதித்து ஒருமாதம் வாழ்ந்து காட்டு. எதற்கும் என்னுடைய பெயரை செல்வாக்கை எந்த இடத்திலும்  பயன்படுத்தக் கூடாது என்றேன். அவரும் அதே போல வாழ்ந்து காட்டியுள்ளார்." என்கிறார் நெகிழ்வாக.

தந்தையின் சவாலை வெற்றிகொண்ட   ட்ராவ்யா தொலாக்கியா தெரிவிக்கையில், 'அப்பாவின் சொல்படி வேலை தேட நான் தேர்ந்தெடுத்த மாநிலம் கேரளா. எனக்கு மலையாளம் தெரியாது. அங்கு அதிகம் இந்தி மொழி தெரிந்தவர்களும் இல்லை.ஆனாலும் பல இடங்களில் வேலை தேடினேன். கொச்சி முழுக்க 60 நிறுவனங்களில் வேலை தேடினேன். கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளரவில்லை. இறுதியாக பேக்கரி ஒன்றில் வேலை கிடைத்தது. அடுத்துஅழைப்பு மையம் ஒன்றிலும், மெக் டொனால்ட் கடையிலும் வேலை பார்த்தேன். எல்லாமே சிறு சிறு வேலைகள்தான். ஒரு மாதத்தில் ரூ.4000 மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. வேலை இல்லாமல் இருப்பதும் அதைத் தேடி அலைவதும் எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்ந்து கொண்டேன்.

இந்தச் சமயத்தில்தான், நான் வேலை செய்யும் பேக்கரிக்கு வந்த ஒருவர் எனது வேலையைப் பார்த்து 'இம்ப்ரஸ்' ஆகியுள்ளார். அவர் தான் பணிபுரியும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்தார். ஆனால் அப்போது அவருடன் இருந்த நபர்கள் 'இவரைப் பற்றி ஒன்றும் தெரியாத நிலையில் அவருக்கு வேலை வாங்கித் தரவேண்டாம்' என்று கூறினர். இருப்பினும் எனது வேலைத்திறன் அவருக்குப் பிடித்துப் போகவே  புதிய வேலைக்குப் பரிந்துரைத்தார். இதற்கிடையே எனது தந்தை நிறுவனத்தில் இருந்து போன் அழைப்பு வந்துள்ளது.

என் மீது நம்பிக்கை வைத்து வேலைக்கு ஏற்பாடு செய்த அவருக்கு நன்றி தெரிவித்து, நான் யார் என்றும் என்ன நிலையில் வேலைக்கு வந்துள்ளேன் என்பதை அவரிடம் விளக்கிக் கூறியுள்ளார்கள். இதனால் இன்ப அதிர்ச்சிக்கு ஆளான அவர் என்னை மனமார வாழ்த்தினார். விரைவில் எனது சொந்த ஊருக்குச்  செல்கிறேன்.  தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய மனதோடு குஜராத் பயணமாகிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரு முக்கிய விஷயம், சக மனிதனுடன் அன்பும் கரிசனமும் கொண்டு பழக வேண்டும் என்பதுதான்" என்றார் வாழ்வின் புரிதலோடு.        

கண்டிஷன்ஸ் அப்ளை - படித்துப் பார்த்து வாங்குங்கள்!

கண்டிஷன்ஸ் அப்ளை - படித்துப் பார்த்து வாங்குங்கள்!


இன்றைக்கு எந்த ஒரு பொருளைத் தயாரிக்கும் நிறுவனமும், 'கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற இரு வார்த்தைகளை  நட்சத்திரக் குறியுடன் அச்சிடத் தவறுவதில்லை. சோப்பு முதல் செல்போன்கள் வரை எல்லா பொருட்களிலும் இந்த வார்த்தைகளைக் கட்டாயம் பார்க்கலாம். நிறுவனம் தயாரிக்கும் பொருளில் ஏதாவது குறை இருந்தால் அல்லது சேவை சரியில்லை என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் செய்தால், 'கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற வார்த்தைகளைக் காட்டி தப்பித்துவிடுகிறது அந்த நிறுவனம்.

மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் என முதலீட்டு உலகிலும் 'கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற எச்சரிக்கை இருந்தாலும், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் எனப்படும் நுகர்வோர் பொருட்களில்தான் இந்த வார்த்தைகளை  சாதுரியமாகப் பயன்படுத்துகின்றன பல நிறுவனங்கள். நாம் வாங்கும் இந்தப் பொருட்களில் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு மிக மிகச் சிறிய எழுத்துகளில் லென்ஸ் வைத்துப் படிக்கிற மாதிரி அச்சிடப்பட்டிருக்கும் இந்த வாசகங்கள். 'கண்டிஷன்ஸ் அப்ளை’ என நிறுவனங்கள் அச்சிடுவதோடு சரி, என்ன நிபந்தனைகள் என்பதை எந்த நிறுவனமும் சொல்வதில்லை. என்ன நிபந்தனை என அந்த நிறுவனத்திடம் கேட்டால், அதை எங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று படித்துக் கொள்ளுங்கள் என்கின்றன.

சரி, என்ன நிபந்தனைகளைச் சொல்லியிருப்பார்கள் என இணையதளத்துக்குச் சென்று பார்த்தால், நிபந்தனைப் பட்டியல் பத்து, பதினைந்து பக்கங்களுக்குமேல் செல்கின்றன. இந்த நிபந்தனைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. இந்த ஆங்கிலமும் புரியாதபடிக்கு டெக்னிக்கல் வார்த்தைகளைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இதனால் சாமானியர்களால் இந்த நிபந்தனைகளை எளிதில் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஐந்து ரூபாய் தந்து வாங்கும் சிப்ஸ் பாக்கெட்டில் நமக்கு என்ன பாதகம் வந்துவிடப்போகிறது; இதற்கு ஏன் நிபந்தனை போடுகிறார்கள் என்று நினைத்து, அதன் நிபந்தனைகளைப் படித்தால், நம் வயிறு எரியும். அந்த சிப்ஸில் கலக்கப்பட்டுள்ள சில மூலப்பொருட்களினால் நம் உடலுக்குப் பாதிப்பு வரலாம் என்று  சொல்லியிருப்பார்கள். ஆனால், இதைத் தெரிந்துகொள்ள இந்தப் பொருளை வாங்குகிற விலையைவிட அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

எல்லா பொருட்களிலும் 'கண்டிஷன்ஸ் அப்ளை’ என அச்சிடுவது சரியா, இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று சிட்டிசன் கன்ஸ்யூமர் மற்றும் சிவிக் ஆக்‌ஷன் குரூப் ஒருங்கிணைப்பாளர் சரோஜாவிடம் கேட்டோம்.

'நிறுவனங்கள் இப்படி செய்வது தவறு. வாடிக்கையாளர்களுக்குப் புரிகிற மாதிரி எளிமையான மொழியில்தான் நிபந்தனைகளுக்கான வாசகங்களை  தரவேண்டும். இதில் மக்கள் செய்யும் தவறு என்னவெனில், 'இன்றோடு இந்த ஆஃபர் முடிகிறது’ என்கிற விளம்பரத்தைப் பார்த்தாலே போதும், உடனே அந்தப் பொருளை வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள். இதனால் அந்தப் பொருளை வாங்குவதற்கான நிபந்தனைகளைப் அவர்கள் படித்துப் பார்ப்பதில்லை.

ஆனால், 'கண்டிஷன்ஸ் அப்ளை’  என்று சொல்லும் விற்பனையாளர்கள், அவர்கள் சொல்லும் நிபந்தனைகளை மக்களுக்கு அவசியம் எடுத்துச் சொல்ல வேண்டும். அவை கண்ணுக்கு தெரியும்படி, புரியுமாறு அச்சிட்டிருக்க வேண்டும்.

நிபந்தனைகளில் சொன்னபடி இல்லாமல், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படும்பட்சத்தில் அந்த நிறுவனத்தின் மீது உடனடியாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். ஆனால், 'நான் வாங்கும் 10 ரூபாய் பொருளுக்கு பல ஆயிரம் செலவு செய்து வழக்குப் போட வேண்டுமா?’ என்று நினைத்து பலரும் சும்மா இருந்துவிடுகிறார்கள். இதனால் நிறுவனங்கள் செய்யும் தவறுகள் திருத்தப்படாமலே போய்விடுகிறது.

'கண்டிஷன்ஸ் அப்ளை’ என்று பார்த்த மாத்திரத்தில், நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

1.ஒரு பொருள் அல்லது  சேவைவை வாங்கும்முன், அதற்கான நிபந்தனைகளை நன்றாகப் படித்து, புரிந்துகொண்டு கையெழுத்திடுங்கள். ஒருவேளை ஏஜென்ட்டோ , விற்பனை யாளரோ அவசரப்படுத்தினால் அனுமதிக்காதீர்கள்!

2. பொருட்களோடு வழங்கப்படும் ஆஃபர்களை நிராகரிக்க உங்களுக்கு உரிமை உண்டு. அப்படி திணிக்கப்பட்டால் நீங்கள் வேண்டாம் என்று முறையிடலாம். ஆனால், இதில் நீங்கள் படிக்காமல் கையெழுத்து போட்டுவிட்டால், அதன்மேல் வழக்குத் தொடர இயலாது.

3. சமூக வலைதளங்கள், இணையதளங்களில் கணக்கு துவங்கும்முன் அதன் சட்டதிட்டங்களைப் படியுங்கள். அதில் தனிப்பட்ட விஷயங்களை நீங்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே அனுமதியுங்கள்.

4. 'கண்டிஷன்ஸ் அப்ளை’ என்று படித்தபின், அங்கே நிபந்தனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனில், அந்த நிறுவனத்தை அணுகியோ இணையதளத்திலோ பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருநாள் ஆனாலும் பரவாயில்லை பார்த்துப் படித்து ஆராய்ந்து வாங்குவது சிறந்தது'' என்றார்.

எந்த விஷயத்தையும் பதற்றப்படாமல் செய்தாலே, பிற்பாடு எந்தப் பிரச்னையும் வராது. குறைந்த விலையில் பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்து, அவர்கள் காட்டிய இடத்திலெல்லாம் நீங்கள் கையெழுத்துப் போட்டீர்கள் என்றால், பிற்பாடு உங்கள் உரிமைக்காக நீங்கள் போராடவே முடியாது! 

தவிர்க்க வேண்டிய வீண் செலவுகள்!

தவிர்க்க வேண்டிய வீண் செலவுகள்!


1. சம்பளம் வாங்கியவுடன் நண்பர்களை அழைத்துக்கொண்டு  காஸ்ட்லி ரெஸ்டாரன்ட்டுக்குப் போய்ச் சாப்பிடுவது, ஷாப்பிங் செய்வது என இன்றைய இளைஞர்களில் பலர் எக்கச்சக்கமாக செலவு செய்கிறார்கள். ஜாலி என்கிற பெயரிலும் ரிலாக்ஸ் என்கிற எண்ணத்திலும் இவர்கள் செய்கிற இந்தச் செலவுகள் எந்த அளவுக்கு அவசியமானது என நினைத்துப் பார்ப்பதே இல்லை. முடிந்தவரை இதைத் தவிர்க்கலாம்.

2. இ-காமர்ஸ் நிறுவனங்கள் தரும் ஆஃபர்களைப் பார்த்துவிட்டு தேவை யில்லாதப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள் சிலர். 40% தள்ளுபடி விலை என்பதால் ஒன்றுக்கு இரண்டு செல்போன்களை வாங்கி வைத்திருந்து என்ன பயன் என யாரும் யோசிப்பதில்லை. உங்கள்

செல்போனில் ஆஃபர்ஸ் பற்றி தகவல் தரும் எந்த ஆப்ஸுக்கும் நோட்டிஃபிகேஷன் அமைப்பை ஆன் செய்து வைக்காதீர்கள். காரணம், தினமும் வரும் டாப்-அப் செய்திகள் உங்களை அந்தப் பொருளை ஏதாவது ஒருநேரத்தில் வாங்கத் தூண்டும்.  அதேபோல, கூடுதலாக செலவு செய்யத் தூண்டும் கேஷ் பேக் ஆஃபர்களையும் தவிர்க்கலாம்.

3. இன்றைய இளைஞர்கள் டூவீலரை அடிக்கடி மார்டனாக மாற்ற அதிகம் செலவு செய்கிறார்கள். ரிம்களை மாற்றுவது, ஹாரன்களை மாற்றுவது, ரேஸ் பைக்குகளைப்போல வண்டியின் அமைப்புகளை மாற்றுவது, பெயின்டிங் செய்வது என நிறைய  செலவு செய்வதைத் தவிர்த்தால், நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியுமே!

4. எந்த சினிமா படம் வெளியானாலும், அதை முதல் நாளன்றே பார்த்துவிடுவது என சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். இதற்காக இவர்கள் அதிகக் கட்டணம் கொடுக்கக்கூட தயங்குவதில்லை. இப்படி அவர்கள் சினிமாவுக்குப் போவதுடன், நண்பர்களையும் பெருமையோடு அழைத்துச் செல்கிறார்கள். இதனால் சம்பளத்தின் கணிசமான பகுதி கணக்கில் வராமலே காலியாகிவிடுகிறது. இந்தச் செலவைத் தவிர்த்து, சேமித்தால் பெரும் பணம் சேருமே!



5. எல்சிடி டிவி இருந்தாலும், புதிதாக வந்த எல்இடி டிவியை வாங்குவது, ஒரு டன் ஏசி ஏற்கெனவே வீட்டில் இருக்க, இரண்டு டன் ஏசியை வாங்குவது, நல்ல ஆண்ட்ராய்டு போன் இருந்தாலும், புதிதாக வந்த போனை தேவையேயில்லாமல் வாங்குவது என நல்ல கண்டிஷனில் இருக்கும் பொருட்களையே தூக்கிப் போட்டுவிட்டு புதிதாக வாங்குவதைத் தவிர்க்கலாம். அந்தப் பணத்தை நல்ல லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம்.

6. எடுத்ததற்கெல்லாம் ட்ரீட் கொடுப்பது இன்றைக்கு கலாசாரமாகிவிட்டது. மாத பரீட்சையில் பாஸாவது தொடங்கி, புராஜெக்ட் முடிப்பது வரை எல்லாவற்றுக்கும் ட்ரீட் கேட்பதும், தருவதும் வாடிக்கையான விஷயமாகி விட்டது. இதற்காக ஒருவர் ஒரு மாதத்துக்கு 1,000 - 2,000 ரூபாய் வரை செலவு செய்கிறார். இந்தச் செலவைத் தவிர்க்கலாம்.

7. வீட்டில் நடைபெறும் பிறந்தநாள், திருமணநாள் போன்ற பார்ட்டிகளில் தங்களின் பொருளாதாரச் சூழலுக்கு மீறி பந்தாவுக்காக, அடுத்தவர்கள் வியக்க வேண்டும் என செலவு செய்வதை முடிந்தவரைத் தவிர்க்கலாம்.

8. ஃபேஷன் மோகம் சிலருக்கு அதிகமாக இருக்கும். கடன் வாங்கியாவது கண்ணில் படும் புது ரக ஆடைகளை வாங்கிக் குவிப்பதையும், தேவைக்கும், தகுதிக்கும் அதிகமாக அழகு சாதனப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதையும் கொஞ்சம் குறைக்கலாம்.


9. ஐந்து நிமிடத்தில் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை அரைமணி நேரம் பேசுவதையும், தேவையே இல்லாமல் எஸ்எம்எஸ் அனுப்புவதையும் தவிர்த்தால் செல்போன் கட்டணம் பாதியாகக் குறையும்.

10. சைக்கிளில் போகக்கூடிய தூரமே இருக்கும் காய்கறிக் கடைக்கு பைக்கில் போவதையும், பஸ்ஸில் போவதற்கான சூழல் இருந்தும் ஆட்டோ, கால்டாக்ஸி யில் போவதையும் தவிர்க்கலாம்.

கிரெடிட் கார்டுன்னா என்ன?

கிரெடிட் கார்டு - விளக்கம்..!


‘’ஏலேய்... அண்ணாச்சி கடையில போய் இந்த லிஸ்டில் இருக்கிற சாமானை எல்லாம் வாங்கிட்டு வா... அந்த சிட்டையை எடுத்துட்டுப் போ!’’ என்று மகனைத் துரத்திவிடுவாள் தாய். அவனும் லிஸ்டைக் கொண்டுபோய் சாமான்களை வாங்கிக்கொண்டு, காசு கேட்கும் அண்ணாச்சியிடம் சிட்டையைக் கொடுப்பான். அவர், அந்த லிஸ்டில் உள்ள பொருட்களுக்கு உரிய தொகையை அந்த சிட்டையில் எழுதிக் கொடுப்பார்.

மாதக் கடைசியில் அந்தச் சிட்டையில் உள்ள தொகையைக் கூட்டிப் பார்த்து கணக்கை பைசல் பண்ணிக்கொள்வார்கள். இது பல காலமாக நம்மூர் கிராமங்களில் நடைமுறையில் இருப்பதுதான். அதேபோல நகரத்துவாசிகளின் கையில் இருக்கும் சிட்டைதான் கிரெடிட் கார்டு! என்ன வித்தியாசம்னா, அண்ணாச்சி கடை சிட்டையை அவர் கடையில் மட்டும்தான் பயன்படுத்த முடியும். ஆனா, இந்த கடன் அட்டையை பல கடைகளில் பயன்படுத்திக்கலாம்.

நாடும் விலைவாசியும் இருக்கிற நிலைமையிலே இன்னிக்கு மிடில் கிளாஸ் வர்க்கத்துக்குப் பல சமயங்களில் கை கொடுப்பது இந்த கிரெடிட் கார்டுதான். பத்து தேதிக்குப் பிறகு வாங்குற சம்பளம் பத்தாமப் போயிடுது. அதுக்குப் பிறகு ஏதாவது அவசரத் தேவைன்னா கைகொடுக்கறது இந்த கிரெடிட் கார்டுதான்!

கிரெடிட் கார்டுன்னா என்ன?

ஒரு மனுஷனோட வருமானம், வாழ்க்கை முறை, வசதிகள் எல்லாவற்றையும் பார்த்து ஒரு வங்கி இன்னார் இவ்வளவு தொகைக்கு தகுதியானவர்தான்னு எடைபோடும். அந்தத் தொகைக்கு ஏற்ற அளவுக்கு அவர் செலவழிக்க அந்த பேங்க் கடன் கொடுக்கும். அதாவது, இவ்வளவு தொகை வரைக்கும் இவர் செய்யும் செலவுகளுக்கு நான் பொறுப்பு... அவர் செலவழிக்கும் பணத்தை நான் கட்டி விடுகிறேன் என வங்கி அறிவிக்கும். எவ்வளவு செலவழிக்கிறார்னு கணக்குப் பார்க்கவும், கடைகளில் தான்தான் அத்தாரிட்டினு தெரிவிக்கிறதுக்கும் வங்கி அவருக்கு ஒரு கார்டைக் கொடுக்கும்.

அந்த கார்டைக் கொண்டுபோய் கடையில் காட்டி பொருளை வாங்கிக் கொள்ளலாம். கடைக்காரரும் அவர் கிட்டே இருக்கிற மெஷினில் இந்த அட்டையைத் தேய்த்த உடன் வங்கியிலிருந்து சில நொடிகளில் வரும் ஆன்லைன் அப்ரூவலைப் பார்த்துட்டு பொருளைக் கொடுத்து விடுவார்.

அந்த மெஷினில் தேய்க்கும்போதே வங்கிக்கு இவர் இவ்வளவு தொகைக்கு இந்த இடத்தில் பொருள் வாங்கியிருக்கார் என்று தகவல் போய்விடும். அந்தத் தொகையை வங்கி அந்தக் கடைக்குக் கொடுத்து விடும். கார்டு வெச்சிருக்கும் ஆளுக்கு மாசத்துக்கு ஒரு தடவை செலவு விவரங்களை அச்சடிச்சு (மின்னஞ்சலிலும் வரும்) ரசீதாக அனுப்பிடும். அவரும் அந்தத் தொகையை வங்கிக்குக் கட்டி விடுவார்.

வீட்டுக் கடன் எவ்வளவு கிடைக்கும்?

வீட்டுக் கடன் எவ்வளவு கிடைக்கும்?

நீங்க வாங்கப் போகிற அல்லது கட்டப்போகிற வீட்டுக்கான முழுச் செலவுக்கும் கடன் தர மாட்டாங்க. மொத்தத் தொகையில சுமார் 15 முதல் 20 சதவிகிதப் பணத்தை நீங்க கையிலேயிருந்து போடவேண்டி வரும். இதை ‘மார்ஜின் மணி’ அப்படிங்கிறாங்க.

இந்தப் பணத்தையும் கடனா வாங்கக்-கூடாது. அப்புறம் கடன் தொகை கூடுதலாகி, கட்டுறதுல சிரமமாயிடும். அதனால, இந்த மார்ஜின் தொகையை தயார் செஞ்சுகிட்டு, அதுக்கு அப்புறமாதான் கடன் வாங்கணும்.

கடன் தர்றதுக்கு வீட்டோட மொத்த மதிப்பை கணக்குப் பண்ணுறது ஒரு பக்கம் இருந்தாலும், கடன் வாங்குறவரோட மாத வருமானம் எவ்வளவுங்குறதும் முக்கியமான விஷயம். இதன் அடிப்படையிலதான் எவ்வளவு கடன் தர்றதுங்குறதை முடிவு செய்வாங்க.

பொதுவா ஒருத்தரோட நிகர மாதச் சம்பளத்தைப் போல 40-லிருந்து 60 மடங்கு வரை வீட்டுக் கடனாக தருவாங்க. மாதச் சம்பளம் 15 முதல் 20 ஆயிரத்துக்குள்ள இருந்தா 40 முதல் 45 மடங்கும், 25 முதல் 40 ஆயிரம் ரூபாய்ன்னா 50 முதல் 55 மடங்கும் கடன் கிடைக்கும்.

இதை ஒரு உதாரணம் மூலமாப் பார்த்தா சட்டுன்னு புரியும். பிரபு, 20 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்கப் போறார்னு வச்சுக்குவோம். இதுல 20% தொகையான 4 லட்ச ரூபாயை அவர் கையிலேருந்துப் போடணும். மீதி 16 லட்ச ரூபாய்தான் கடனா தருவாங்க!

இந்தத் தொகையை கடன் வாங்க பிரபுவோட மாதச் சம்பளம் சுமார் 35,000 ரூபாயா இருக்கணும். இதுக்குக் குறைஞ்சா 16 லட்ச ரூபா கடன் கிடைக்காது. ‘அந்த வீட்டை வாங்கியே ஆகணும்னு பிரபு விருப்பப்பட்டா, கடன் கிடைச்சது போக மீதித் தொகையையும் கையி-லேர்ந்துதான் போட்டாகணும்.

எதுக்காக கிரெடிட் கார்டு?

எதுக்காக கிரெடிட் கார்டு?


முதலாவது நாடு இருக்கும் நிலைமையில் ஓரளவுக்கு மேல கையில பணத்தை எடுத்துக்கிட்டு போறது அத்தனை பாதுகாப்பாக இல்லை. லாரியிலே கொண்டு போனாலே வழிமறிச்சு கொள்ளை அடிச்சுட்டுப் போயிடுற காலமா இருக்கு. அதேசமயம், பொருட்களை வாங்காமலும் இருக்கமுடியாது. அந்த மாதிரி சமயத்துலதான் கிரெடிட் கார்டுங்கறது ரொம்ப பிரயோஜனமா இருக்கும். பர்ஸூல கார்டைச் செருகிட்டுப் போனோமா... பொருளை வாங்கினோமானு வந்திடலாம்.

அடுத்ததா பார்த்தீங்கன்னா, கடனுக்கு ஒரு பொருளை வாங்கும்போது அதுக்கான வட்டியைக் கொடுக்க வேண்டியிருக்கும். அதுவே கிரெடிட் கார்டில் வாங்கினால் குறிப்பிட்ட காலத்துக்கு அதை வட்டியில்லாக் கடனா பயன்படுத்த முடியும். ஆனா, இப்படிச் செய்யும்போது கவனமா இருக்கணும். ஏன்னா, கிரெடிட் கார்டுங்கறது கத்தி மாதிரி... கொஞ்சம் அசந்தா நம் கையைப் பதம் பார்த்துரும்.

முன்னெல்லாம் வங்கிகள் மட்டும்தான் கிரெடிட் கார்டை கொடுத்தன. இப்போ தனியார் நிதி நிறுவனங்கள், சேவை மையங்கள் எல்லாம் கூட கார்டுகளை தருகின்றன. வங்கிக்கு வங்கி, கார்டுக்கு கார்டு வித்தியாசம் இருக்கு. சிலர் சர்வீஸ் சார்ஜ் குறைவாப் போடுவாங்க. சில கார்டுகளுக்கு அதை எல்லாக் கடைகளிலும் பயன்படுத்தலாம்ங்கற வசதி இருக்கும். வேறு சில கார்டுகளுக்குக் கடைகள்ல நிறைய சலுகை கிடைக்கும். இதையெல்லாம் கவனிச்சு, எது நமக்கு நல்ல பலன் தருமோ அந்த கார்டை வாங்குறதுதான் சரியா இருக்கும்.

நிறுவன தலைவர்களுக்கு உதவும் 5 ஆப்ஸ்கள்

நிறுவன தலைவர்களுக்கு உதவும் 5 ஆப்ஸ்கள்!



இதுநாள்வரை ஒரு லேப்டாப்பை வைத்து நாம் செய்த பல வேலைகளை, இப்போது ஒரு செல்போனை வைத்து செய்துவிட முடிகிற அளவுக்கு தொழில்நுட்பம் மாறியிருக்கிறது. இந்த மாற்றத்துக்கு அடிப்படையாக இருக்கின்றன சில ஆப்ஸ்கள். ஒரு கல்லூரி மாணவன் தொடங்கி ஒரு பெரிய நிறுவனத்தின் சிஇஓ வரை அனைவருக்கும் உதவும் விதவிதமான ஆப்ஸ்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நிறுவனங்களின் தலைவர்களாக இருக்கும் சிஇஓக்களுக்கு உதவும் டாப் ஆப்ஸ்களைப் பார்ப்போம். இந்த ஆப்ஸ்கள் நிறுவனங்களின் உயர்பதவியில் இருப்பவர்கள் அனைவருக்கும் கட்டாயமாகத் தேவைப்படும்.

1 ஆபீஸ் ஆப்ஸ்!

பொதுவாக, சிஇஓ போன்ற உயர்பதவி வகிப்பவர்களுக்கு அலுவலக வேலைகளை அலுவலகத்தைவிட்டு வெளியில் உள்ளபோது கவனிக்க வேண்டிய தேவை அதிகம் உள்ளது. அப்படிப்பட்டவர் களுக்கு முதலில் மிகவும் தேவையான ஆப்ஸ் தனது டாக்குமென்ட்டுகளைத் தயார் செய்ய உதவும் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்தான். இது ஐபோன், ஐபேடில் ஆப்பிள் ஆபீஸ் என்ற பெயரில் இருக்கும். இதில் அலுவலகத்தின் ஒரு செய்தி அல்லது தகவல்களைப் பார்க்க உதவும் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் வேர்டு, திட்ட விளக்கங்களுக்கு உதவக்கூடிய பவர் பாயின்ட், அலுவலக கணக்குகளைப் பார்க்கக்கூடிய எக்ஸ்எல் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த ஆப்ஸ், ஒரு டாக்குமென்ட்டை பார்த்து, படித்து, அதனை மாற்றியமைத்து அதனை நேரடியாக மின்னஞ்சல் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பும் விதமாக அமைந்துள்ளது.

ஆப்பிள் போனில் இந்த ஆப்ஸ் இடம்பெற்றிருக்கும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இது இலவசமாகக் குறைந்த வசதிகளுடன் தரப்பட்டுள்ளது. அதிக மற்றும் முழுமையான அப்டேட் உள்ள ஆப்ஸ்கள் கட்டண ஆப்ஸாக உள்ளன. சிஇஓக்கள் தங்கள் அலுவலகத் தகவல்களை உடனுக்குடன் அறிய மற்றும் தெரிவிக்க இந்த ஆப்ஸ் எளிமையாக உதவும்.

2 தொலைத்தொடர்பு ஆப்ஸ்கள்!

ஆபீஸுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளத் தொலைத்தொடர்பு ஆப்ஸ்கள் அதிக அளவில் உதவி செய்வதாக இருக்கின்றன. சில முக்கியமான கூட்டங்கள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றில் சிஇஓக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதால், அவர்கள் பங்கேற்க முடியாத நேரங்களில் பெரும்பாலும் அவர்களுக்கு உதவும்விதமாக இருப்பது இந்த ஆப்ஸ்கள்தான். இந்தத் தொலைத்தொடர்பு ஆப்ஸ்களில் மிகவும் உதவிகரமாக இருப்பது ஸ்கைப். இதில் வாய்ஸ்கால், வீடியோகால் மூலம் நிறுவனத்தோடு தொடர்பில் இருக்கலாம். குறைந்த கட்டணத்தில் செல்போன் மற்றும் லேண்ட்லைன் போன்களுக்குத் தொடர்புகொள்ளலாம்.

3ஜி மற்றும் வை-ஃபையில் இயங்கும் ஸ்கைப், கான்ஃப்ரன்ஸ் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இந்த ஆப்ஸை சிஇஓக்களின் பயணச் செலவுகளைக் குறைக்கும் உத்தியாகவும் பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி, நிறுவன பணியாளர்களோடு எப்போதும் தொடர்பில் இருப்பது போன்ற உணர்வையே இது ஏற்படுத்துவதால், இது நிறுவன தலைவர் களுக்கு உதவியாக உள்ள ஆப்ஸ்களின் வரிசை யில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இதேபோன்ற வசதிகளுடன் வைபர், மேஜிக் ஜாக், ஃபேஸ் டைம் ஆகிய ஆப்ஸ்களும் உள்ளன.

3 நோட் ஆப்ஸ்!

நிறுவனத் தலைவர்கள் சில முக்கியமான மீட்டிங்களுக்குத் தயாராகும்போது அதற்கான குறிப்புகளை உடனே தயார் செய்ய பரிந்துரைக்கப் படும் ஆப்ஸ்கள் மூன்று. அவை, ஒன் நோட், எவர் நோட் மற்றும் லெக்சர் நோட்.

இவை மூன்றும் ஏறக்குறைய ஒரேமாதிரியான செயல்பாடுகளைக் கொண்ட ஆப்ஸ்கள்தான். ஒன் நோட் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆப்ஸ்.  இதில் இயங்க ஒரு மைக்ரோசாஃப்ட் கணக்குத் தேவை. நீங்கள் தயார் செய்யும் குறிப்புகளை இதன் மூலம் மற்றொருவருடன் நேரடியாகப் பகிர  முடியும். இதில் நீங்கள் புகைப்படங்களையும் சேர்க்க முடியும்.


எவர் நோட் ஆப்ஸில் தயாரிக்கப்படும் குறிப்புகள் அனைத்து மொபைல் போன்களிலும் பயன்படுத்தும் அளவுக்கு எளிதாக இருக்கும். இதில் தயாரிக்கப்படும் குறிப்புகள் எளிதாகத் தேடும் அளவுக்கு இதன் தேடுதல் பக்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பிடிஎஃப் பக்கங்களாககூட மாற்றிக்கொள்ளலாம்.

லெக்சர் நோட் ஒருவர் கையால் எழுதுவது போன்ற வடிவத்திலேயே செல்போன் திரையில் எழுதி குறிப்புகளை எடுக்க உதவும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ் ஆகும். இது கட்டண ஆப்ஸ். இதற்கான மாதிரி பயன்பாட்டு ஆப்ஸ் இலவசமாகக் கிடைக்கிறது.

4 நினைவக ஆப்ஸ்!

பெரும்பாலான சிஇஓக்கள் தங்கள் செல்போனுக்கு வரும் தகவல்களைச் சேமித்து வைக்கவேண்டிய சூழல் இருக்கும். தற்போது செல்போன்கள் அதிக அளவு இன்டர்னல் மெமரியோடு வந்தாலும், மிகப் பெரிய ஃபைல்களைச் சேமித்து வைக்க வசதியாக இல்லை என்பதால் அதற்கு உதவியாகச் சில நினைவக ஆப்ஸ்கள் உள்ளன.

இதில் முக்கியமானது ட்ராப் பாக்ஸ்தான். 2 ஜிபி வரை இலவசமாகச் சேமித்துக் கொள்ளலாம். பிறகு கட்டணம் செலுத்தி, 100 ஜிபி வரை சேமித்து வைத்துக்கொள்ளும் அளவுக்குச் சிறப்பான ஆப்ஸாக உள்ளது. இதில் நீங்கள் சேமித்து வைக்கும் தகவல் களை மற்றவர்களுடன் பகிரும் வசதியும் உள்ளது.

இதேபோன்ற வசதியுடன் இலவசமாகக் கிடைக்கும் சில சிறந்த ஆப்ஸ்களும் உள்ளன. ஒன் ட்ரைவ், கூகுள் ட்ரைவ் ஆகிய ஆப்ஸ்கள் நீங்கள் புதிதாகத் தகவல்களை உருவாக்கி, அதனை யாருடன் பகிர்ந்து கொள்வது, அதனை மாற்றியமைக்க யாருக்கு அனுமதி வழங்குவது என்ற அளவுக்குத் தகவல்களைச் சேமித்து வைக்கும் வசதியுடன் உள்ளன.

ஆப்பிள் போன்களில் ஐ-க்ளவுட் வசதியில் 5 ஜிபி வரை இலவசமாகச் சேமிக்கலாம். பின்னர் தேவைப்படும் மெமரிக்குக் கட்டணம் செலுத்தி அதிகரித்துக் கொள்ளலாம். மாதத்துக்கு 60 ரூபாய் என்ற அளவில் இருந்து கூடுதல் நினைவக வசதிகள் உள்ளன.

5 சமூக வலைதள ஆப்ஸ்கள்!

பெரிய நிறுவனங்களில் தலைவர்களாக இருப்பவர்கள் பொதுவாக அனைவரும் இருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களைவிட அவர்கள் அதிகம் உலாவுவது லிங்டு இன் போன்ற சமூக வலைதளங்களில்தான். இதில் அவர்கள் மிகவும் புரஃபஷனலாக இயங்க முடியும்.

குறிப்பிட்ட பிரிவில் சிறப்பாகச் செயல்படும் ஒரு நிறுவனத் தலைவரை அந்தப் பிரிவில் ஆர்வம் உள்ள பலரும் தொடர்புகொள்ள முடியும் என்பதால் இந்த ஆப்ஸையே நிறுவனத் தலைவர்கள் அதிகம் விரும்பு கின்றனர். இதில் பிரீமியம் கணக்குகளும் உள்ளன. 10 டாலர் ஆரம்பித்து 60 டாலர் வரை மாத பயன்பாட்டுக்குக் கட்டணமாகக் கொடுத்து பயன்படுத்தும் அளவுக்குக் கட்டணங்கள் உள்ளன.

இதன் அடுத்த வடிவமாக வந்துள்ள லிங்டு இன் கனெக்டெட் ஆப்ஸ் வேகமாகவும், எளிதாகவும் ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது. உங்களுக்குத் தெரிந்த நண்பர்களை அடையாளம் காட்டுவது துவங்கி அவர்களது பிறந்தநாள், விருப்பம் ஆகியவற்றைத் தெரிவிக்கும் அளவுக்கு மேம்பாடு அடைந்ததாக உள்ளது இந்த ஆப்ஸ்.

சும்மா இருந்தால் சூப்பர் வெற்றி - ட்ரையிங் நாட் டு ட்ரை

சும்மா இருந்தால் சூப்பர் வெற்றி - ட்ரையிங் நாட் டு ட்ரை

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் ‘ட்ரையிங் நாட் டு ட்ரை’ என்ற எட்வர்ட் ஸ்லிங்கர்லேண்ட் எழுதியது. சும்மா இருத்தல் என்பது குறித்த சுவையான புத்தகம் இது. இதில் சும்மா இருத்தல் என்பது ஒன்றுமே செய்யாமல் இருத்தல் என்ற பொருளில் சொல்லப்படுவதல்ல – ஒருவர் ஒரு விஷயம் குறித்து முயற்சிக்கும்போது அது சிறப்பாக நிகழ வேண்டுமே என பதைபதைக்காமல் /கவலைப்படாமல் இயன்ற அளவுக்குச் செய்துவிட்டு, அது போகின்ற போக்கில் விட்டுவிடுதல் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது. குறிப்பாகச் சொன்னால், கடமையைப் பதைபதைக் காமல் செய்வது என்றும்கூடச் சொல்லலாம்.

இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் வசிக்கும் ஊரில் ஒரு மியூசியத்தில் ’மைண்ட்பால்’ என்ற ஒரு சுவையான விளையாட்டு இருக்கின்றதாம். டேபிளில் இருக்கும் ஒரு பந்தை எதிரே இருக்கும் எதிராளியின் பக்கம் நகர்த்திச் சென்று எல்லைக் கோட்டைத் தொட்டால் வெற்றி என்கின்ற இந்த விளையாட்டில் ஒரு முக்கியச் சூட்சுமம் இருக்கின்றது.


பந்தை நகர்த்த மின்சாரம் வேண்டும். அந்த மின்சாரத்தை நம்முடைய மூளையில் இருந்து பெறவேண்டும். மூளை ரிலாக்ஸ்ட்டாக இருக்கும் போது வெளியாக்கும் ஆல்பா மற்றும் தீட்டா அலைகளைத் தலையில் எலெக்ட்ரோடுகள் அடங்கிய தலைப்பட்டையை மாட்டிக்கொள்வதன் மூலம் கண்டறிந்து, அந்த அலைக்கு ஏற்றவாறு மின்சாரத்தை மேசைக்கு அடியில் உள்ள ஒரு காந்தத்தில் செலுத்தி பந்தை நகரச் செய்யும்படி அந்த விளையாட்டு இருக்குமாம்.

விளையாடும் நபர் எந்த அளவு ரிலாக்ஸ்ட்டாக இருக்கின்றாரோ, அந்த அளவு ஆல்பா மற்றும் தீட்டா அலைகள் மூளையில் இருந்து வெளிப்பட்டு, பந்து எதிராளியை நோக்கி முன்னேறும். விளையாடும் நபர்கள் கண்களை மூடிக்கொண்டும், ஆழமான மூச்சுவிட்டுக்கொண்டும் மூளையே ரிலாக்ஸ் என படாதபாடுபடுவதைப் பார்த்தால், வேடிக்கையாக இருக்கும். அதிலும், ஒருவர் தீவிரமாக ரிலாக்ஸ் செய்து பந்தை எதிராளியின் எல்லையில் பாதியைத் தாண்டிவிட்டால், எதிராளி பதறிப்போய் பலமிழந்துவிடுவார்.

அதேசமயம், அதுவரை பந்தை ரிலாக்ஸ்ட்டாகத் தள்ளியவரோ பாதித் தாண்டிவிட்டோமே, மீதியையும் முடித்தால் பரவாயில்லையே என நினைத்து கவலைப்பட ஆரம்பித்து ரிலாக்ஸேஷன் குறைந்து ஆல்பா மற்றும் தீட்டா அலைகளை இழப்பார். இப்படி இரண்டு பிளேயர்களும் கூலாகவும், படபடப்பாகவும் மாறுவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், நமக்கு லாபம் தரக்கூடிய ஒரு விஷயத்தில் நடப்பது நடக்கட்டும் என நினைத்து ஒரு விஷயத்தில் சும்மா இருப்பது ரொம்பக் கஷ்டம் என்பதைச் சுலபத்தில் புரிந்துகொள்ள முடியும் என்கின்றார் ஆசிரியர்.
பெரும்பாலும் கலை உலகத்தில் இருப்பவர்களே இந்தச் சும்மா இருப்பதை முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

 ஜாஸ் இசையில் பிரசித்தி பெற்ற ஸாக்சபோன் இசைக்கும் சார்லி பார்க்கர் ஸாக்சபோன் பழகும் இளைஞர்களிடத்தில், ‘நீங்கள் ஸாக்சபோனை வாசிக்காதீர்கள். ஸாக்சபோன் உங்களை வாசிக்கட்டும்’ என்று அறிவுரை சொல்வாராம். நடிகர்களுக்கும் இது பொருந்தும். வெறுமனே ஸ்க்ரிப்டைப் படித்து மனப்பாடம் செய்து வசனம் பேசினால் சூப்பர் எனச் சொல்லமாட்டார்கள். தன்னை மறந்து நடிக்கும் கதாபாத்திரமாக மாறினால்தானே ஆஸ்கார் கிடைக்கின்றது. எதையாவது செய்ய வேண்டும் என்று அங்குமிங்கும் பார்த்து, காப்பி அடித்தால் இணையத்தில் கிழிக்கவல்லவா செய்கிறார்கள்?

ஆனால், ஒரு நடிகர் சும்மா இருப்பது சுலபமான விஷயமா என்ன? முக்கியமான தருணத்தில் சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியமில்லை என பல்வேறு உதாரணங்களுடன் விளக்குகின்றார் ஆசிரியர். அதேசமயம் அந்த முக்கியமான தருணங்களில் ரிலாக்ஸ்ட்டாகச் சும்மா இருந்தால், அதீத வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகரிக்கின்றது என்பதையும் தெளிவாகச் சொல்கின்றார் ஆசிரியர். பலிபீடத்தில் காளைகளைப் பலியிடும் ஒரு இறைச்சி வெட்டுபவராக இருந்தாலும் சரி, நுணுக்கமான மரவேலைகளைச் செய்யும் ஒரு தச்சு வேலைக்காரரானாலும் சரி, அவர்கள் கருமமே கண்ணானவராக மாறும்போது மட்டுமே வேலை சிறப்பாக நடக்கின்றது என்கின்றார்.

சீனாவில் ஒரு பலிபீடத்தில் பலிபோடும் வேலையில் இருப்பவரை, அது எப்படிங்க அரசரே முன்னால் இருக்கும் போதுகூட நீங்க பலிபோடும்போது அவ்வளவு நேர்த்தியாக இம்மி பிசகாமல் வருகின்றது? என்று கேட்டதற்கு, ஆரம்பத்தில் நான் பலியிடத் தொடங்கியபோது பலி கொடுக்கப்படும் மிருகம் என் கண்ணுக்குத் தெரிந்தது. மூன்று வருடங்களுக்குப்பின் எனக்கு மிருகம் தெரிவதேயில்லை. என் தெய்வீக கடமைதான் மனதில் இருக்கின்றது. இறைவன் எந்த அமைப்பில் மிருகங்களைப் படைத்திருக்கின்றான் என்பது எனக்கு முழுமையாய்ப் புரிந்துவிட்டது.

அதுவே என் கத்தியை சரியான பாதையில் பயணிக்கச் செய்கின்றது. அதனாலேயே, பலிபோடும்போது அதை நேர்த்தியாய்ச் செய்ய முடிகின்றது என்று சொன்ன அவர், திறமையான கசாப்புக்கடைக்காரன் வருடத்துக்கு ஒருமுறை கத்தியை மாற்றினால் போதும். ஆனால் திறமை குறைவாய் உள்ளவனோ மாதாமாதம் மாற்ற வேண்டும் என்றாராம்.

அரசருக்காக ஒரு மர வேலைப்பாடு களைச் செய்யும் தச்சரிடம் இது எப்படிச் சாத்தியம் என்று கேட்டதற்கு, முதலில் நான் பாராட்டு, புகழ், திட்டு, தண்டனை எல்லாவற்றையும் மறந்துவிடுவேன். அப்புறம் என்ன கலை புகுந்து விளையாட ஆரம்பித்துவிடும் என்றாராம். எப்படி இதையெல்லாம் மறப்பது சாத்தியம் என்று கேட்டதற்கு, முதலில் மனதை சலனமில்லாமல் மாற்றி என் முழு எனர்ஜியையும் கையகப்படுத்து வேன்.

இதற்கு நான் செய்யும் முதல் காரியம் விரதம். முதல் மூன்று நாட்கள் விரதம் இருந்தால் இது சாத்தியம். விரதம் ஐந்து நாட்கள் தாண்டியபின் புகழ், தண்டனை எல்லாம் மறந்துபோகும். ஏழு நாட்கள் தாண்டியபின் கைகால் இருப்பதே மறந்துவிடும் என்றாராம். கைகால் இல்லாமல் எப்படி தச்சுவேலையை அபாரமாய்ச் செய்ய முடியும் என்பது பிதற்றலாய் உங்களுக்குத் தோன்றும் என்றாலும், எதிர்பார்ப்பற்ற/பின்விளைவு குறித்துக் கவலைப்படாத அளவு கடந்த ஈடுபாடு என்ற ஒன்றே செய்யும் செயலில் சிறப்பை செழிக்க வைக்கும் என்பதுதான் நிஜம் என்கின்றார் ஆசிரியர்.

சும்மா இருப்பதன் லாபத்தைக் கோடிட்டுக் காட்டும் ஆசிரியர் சீனாவின் நீதிக்கதைகளில் ஒரு கதையை அவருடைய பயிற்சி வகுப்புகளில் (இதனை அவர்கள் யாரும் செய்துபார்க்கக் கூடாது என்ற கண்டிஷனுடன்!) அடிக்கடி சொல்வேன் என்கின்றார். அந்தக் கதையில் கடுமையான குடிபோதையில் இருந்த ஒருநபர் வேகமாக ஒடும் மாட்டுவண்டியிலிருந்து கீழே விழுந்துவிட, பெரிய எலும்புமுறிவுக் காயம் எதுவும் இல்லாமல் தப்பித்து விடுகின்றார். எப்படி தெரியுமா? குடிபோதையில் இருப்பவர் பொதுவாக உடம்பை டைட்டாக வைத்துக்கொள்வதில்லை. லூசாகவே வைத்துக் கொள்வார்கள். அதனாலேயே வண்டியிலிருந்து விழுந்தவர் ஒரு தற்காலிக ஜிம்னாஸ்டிக் கலைஞராக மாறிவிடுகின்றார். அதனாலேயே எலும்புமுறிவு ஏற்படவில்லை என்கின்றார் ஆசிரியர்.

ஏன் நம்மால் சும்மா இருக்க முடிவதில்லை என்று கேட்கும் ஆசிரியர், அது மனிதனின் பிறவிக்குணம் என்கின்றார். பிறவியிலேயே நாம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பெரிதாக முயற்சிக்காமல் இருந்தால் அது பெரிய கேடாய்ப் போய் முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த உலகத்துக்கு வருகின் றோம் என்கின்றார். நம்முடைய வாழ்க்கைமுறை கல்வி போன்றவையும் இந்தவகை எண்ணத்தையே அதிகரிக்கச் செய்கின்றன என்கின்றார். நம்மைச் சுற்றியுள்ள உலகமும் புகழ், பணம், பவர், உணவு என எல்லா தேவையையும் நாம் பூர்த்தி செய்தேயாக வேண்டும் என்றும், அதற்கு ஒவ்வொரு விஷயத்தையும் சிறப்பாகச் செய்யவேண்டுமே என்ற கவலை கொள்ள வேண்டும் என்றே நம்மை வளர்த்தெடுகின்றது என்கின்றார்.

சரி, சும்மா இருக்க வேண்டும் என நினைப்பதே ஒரு கவலையாகிப் போகின்றதே. இது ஆசையே படக்கூடாது என்று ஆசைபடுவதைப்போல் அல்லவா இருக்கின்றது என்று கிண்டலடிக்கின்றார். வெற்றி என்பது ஒரு விஷயத்தைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டும், தீவிரமாக முயற்சித்துக் கொண்டும் இருப்பதாலேயே கிடைத்துவிடுவ தில்லை என்பதைப் புரிந்துகொண்டும், நடப்பவற்றை நடக்கும் வழியிலேயே நடக்கவிடுவ தனாலும் பல அனுகூலங்கள் கிடைக்கும் என்பதைச் சொல்லும் புத்தகத்தை எல்லா விஷயத்துக்கும் பதைபதைக்கும் அனைவருமே ஒருமுறை படிக்கலாம்.